News December 18, 2025
EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

கோபியில் அதிமுக உள்ளிட்ட பிற கட்சி நிர்வாகிகளை தவெகவில் இணைக்கும் பணிகளை செங்கோட்டையன் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, கோபி தொகுதியில் அதிமுகவை பலப்படுத்த EPS முனைப்பு காட்டி வருகிறார். உழவர் உழைப்பாளர் கட்சியின் மகுடேஸ்வரன் உள்பட கோபி தொகுதியில் இருந்து, 75-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். தேர்தல் பணிகளில் முழுவீச்சில் செயல்படுமாறு அவர்களுக்கு EPS அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 25, 2025
இங்கிலாந்து கோச்சாக ஆகிறாரா ரவி சாஸ்திரி?

ENG அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என Ex வீரர் மாண்டி பனேசர் வலியுறுத்தியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி, ஆஷஸ் என தொடர் தோல்விகளால் தடுமாறும் இங்கிலாந்து, Bazball பாணியை கைவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரவி சாஸ்திரி தலைமையில் இந்தியா இருமுறை ஆஸி.,யில் டெஸ்ட் தொடர் வென்றதை சுட்டிக்காட்டி, அவருக்கு AUS அணியை வீழ்த்தும் தந்திரம் தெரியும் எனவும் பனேசர் கூறியுள்ளார்.
News December 25, 2025
BREAKING: 10 லட்சம் வாக்காளர்களுக்கு சிக்கல்

SIR படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு அஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்ப ECI முடிவெடுத்துள்ளது. நோட்டீஸ் பெறுபவர்கள், நிரந்தர குடியிருப்பு உள்ளிட்ட 13 சான்றிதழ்களை ஆவணமாக சமர்பிக்கலாம். இதற்கு ஏதுவாக ஜன.25 வரை கட்டணமின்றி சான்றிதழ்கள் வழங்க வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் தகுதியான வாக்காளர் பெயர் மீண்டும் லிஸ்ட்டில் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.
News December 25, 2025
கோர விபத்தில் 20 பேர் இறப்பு.. PM மோடி இரங்கல்

<<18664814>>கர்நாடக பஸ் விபத்தில்<<>> 20 பேர் உயிரிழந்த சம்பவம் தன்னை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். தனது X பதிவில், இரங்கல் கூறியுள்ள அவர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்த நபர்களுக்கு ₹50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற போது இந்த சோகம் நிகழ்ந்தது மிகவும் வேதனைக்குரியது.


