News December 18, 2025
கடலூர் மாவட்ட எஸ்.பி அறிவிப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரியம் சார்பில் எழுத்துத் தேர்வு வரும் டிச.21 அன்று கடலூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற உள்ளது. இதில் 7,228 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர். காலை 10 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. எனவே தேர்வு எழுதுவோர் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் காலை 8:30 மணிக்குள் இருக்க வேண்டும் என எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 30, 2025
கடலூர்: 10-வது போதும்; போஸ்ட் ஆபிஸில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பு பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் <
News December 30, 2025
கடலூர்: வேன் மோதி முதியவர் துடிதுடித்து பலி

பரங்கிப்பேட்டை அருகே அரியகோஷ்டி மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (70). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வேன் ஒன்று குமரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 30, 2025
கடலூரில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது – எஸ்பி தகவல்

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 307 குட்கா போதைப்பொருட்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 403 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 6,224 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று(டிச.29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


