News December 18, 2025
உலகக் கோப்பை நாயகிகளை நேரில் வாழ்த்திய சச்சின்

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் WC-ஐ வென்ற இந்திய மகளிர் அணியை சச்சின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த அவர், பலருக்கு பார்வை இருந்தாலும், சிலருக்கே தொலைநோக்கு பார்வை இருப்பதாக பதிவிட்டுள்ளார். உலக அரங்கில் இந்தியாவை பெருமையடைய செய்துள்ள இந்த வீராங்கனைகள், அடுத்த தலைமுறைக்கு உந்துசக்தியாக திகழ்வதாகவும் பாராட்டியுள்ளார்.
Similar News
News January 8, 2026
விஜய்யை மீண்டும் கூட்டணிக்கு அழைத்த தமிழிசை

அதிமுக – பாஜக கூட்டணியில் பாமகவை தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் இணைய உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். விஜய் NDA-வில் சேரும் போது தான் அசைக்க முடியாத சக்தியாக மாறுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், எப்படி NDA-வில் உள்ள கட்சிகளுக்கு திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு இருக்கிறதோ, அதே பொறுப்பு விஜய்க்கும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 8, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 8, மார்கழி 24 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்:6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்
News January 8, 2026
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: புதிய தமிழகம்

மதுரையில் கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் திராவிட மாயை ஆட்சிக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொள்ள வேண்டும், காசுக்கு ஓட்டு போடும் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும், மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு தலா 2.5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் அடக்கம்.


