News December 18, 2025

AI-ன் தீராத தாகத்தால் காலியாகும் தண்ணீர்!

image

AI-ன் அசுர வளர்ச்சி பூமியின் நீர் வளத்தை வேகமாக காலி செய்து வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். AI இயங்க தேவைப்படும் டேட்டா செண்டர்கள், அதீத வெப்பத்தை வெளியிடுகின்றன. அவை 24*7 இயங்குவதால், இதை குளிர்விக்க பல கோடி லிட்டர் நீர் தேவைப்படுகிறதாம். ஒவ்வொரு 100 வரிக்கும் ஒரு லிட்டர் நீர் அவசியமாகிறது. US-ல் கடந்த 2023-ல் மட்டும் இதற்காக 6,600 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டதாம்.

Similar News

News December 25, 2025

அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது

image

அமெரிக்காவில் ஏற்கெனவே குடியேற்ற கொள்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமீபகாலமாக உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்துக்களில் வாகனங்களை ஓட்டியவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலானோர், முறையான உரிமம் இன்றி கனரக வாகனங்களை ஓட்டிய இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், 30 இந்தியர்கள் உள்பட 49 பேரை அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை கைது செய்துள்ளது.

News December 25, 2025

அதிமுகவின் அடிமடியில் கைவைக்கிறதா பாஜக?

image

TN-ல் இம்முறை குறைந்தபட்சம் 15 இடங்களையாவது பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது பாஜக. இதற்காக அதிமுகவின் சிட்டிங் தொகுதிகளை (20) அக்கட்சி குறிவைத்திருக்கிறதாம். குறிப்பாக, மேட்டுப்பாளையம், அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், கோவை வடக்கு, சிங்காநல்லூர் & திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக – பாஜக சீட் பஞ்சாயத்து சூடுபிடித்துள்ளது.

News December 25, 2025

ஜெலென்ஸ்கியின் புதிய திட்டம்: முடிவுக்கு வருமா போர்?

image

உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர, ஜெலென்ஸ்கி 20 அம்ச அமைதி திட்டத்தை முன்வைத்துள்ளார். USA உடன் இணைந்து உருவாக்கிய இந்த திட்டத்தில், நேட்டோ நாடுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உத்தரவாதத்தை உக்ரைன் கோரியுள்ளது. டான்பாஸ் பகுதியில் சுதந்திர பொருளாதார மண்டலம், மறுசீரமைப்புக்கு நிதி உள்ளிட்டவையும் திட்டத்தில் கோரப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டம் புடினின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!