News December 18, 2025

காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார் விஜய்

image

ஈரோடு மக்கள் சந்திப்பை பிரமாண்டமாகவும், பாதுகாப்புடனும் ஏற்பாடு செய்த செங்கோட்டையனுக்கும், போலீஸுக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். மக்களை சந்திக்க புறப்பட்டதில் இருந்தே பல தடைகள் தொடர்ந்து வருகின்றன. அதையெல்லாம் மக்களின் பேராதரவுடன் முறியடித்து வருகிறோம். அந்த வகையில், ஈரோட்டில் நடந்த சந்திப்பு, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 26, 2025

ராசி பலன்கள் (26.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News December 26, 2025

AI வந்தாலும் மனிதர்களின் தேவை இருக்கும்: IT செயலாளர்

image

AI-ஆல் வேலை இழப்பு விகிதம் இந்தியாவில் குறைவாக இருக்கும் என IT செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில் white-collar வேலைகள் குறைவு. அதேபோல், அறிவியல், டெக்னாலாஜி, இன்ஜினியரிங், மருத்துவ துறைகளில் அதிக white-collar வேலைகள் இருப்பதால், புது வாய்ப்புகள் பெருகும். மேலும், AI செய்யும் வேலைகளை மேற்பார்வையிட மனிதர்கள் தேவைப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 26, 2025

ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு.. NEW UPDATE

image

பொங்கல் பரிசு தொகுப்பை அரசு விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், புதிதாக விண்ணப்பித்துள்ள சுமார் 2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது, புதிய கார்டுகள் பிரிண்ட் நிலையில் உள்ளதாக கூறினர். TN அரசு பொங்கல் பரிசை அறிவிப்பதற்கு முன்னரே, புதிய கார்டுகள் ஆக்டிவ் நிலையிலிருந்தால் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.

error: Content is protected !!