News December 18, 2025
பால் கலப்படத்தை தடுக்க புதிய கொள்கை

பால் கொள்முதல் மற்றும் விற்பனையை சீர்படுத்தவும், பால் கலப்படத்தை தடுக்கவும் புதிய கொள்கை வகுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இந்த கொள்கை மூலம் உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்களை சார்ந்து இருக்க வேண்டிய தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதாவது, உற்பத்தியாளர்களே நேரடியாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு விற்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 24, 2025
‘அம்மா SORRY.. நான் சாகப்போறேன்’

‘அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் பணத்தை வீணாக்க விரும்பவில்லை. என் சாவுக்கு நான் மட்டுமே பொறுப்பு’. நொய்டாவில் விடுதியில் தங்கி இன்ஜினியரிங் படித்துவந்த ஆகாஷ் தீப்பின் கடைசி வரிகள் இவை. சரியாக படிப்பு வரவில்லை என மன உளைச்சலில் இருந்த அவர், அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகனை இழந்த பெற்றோரை என்ன சொல்லி தேற்றுவது? தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை உணருங்கள்!
News December 24, 2025
உலகின் மிக வெயிட்டான விலங்குகள்

உலகில் பெரிய உயிரினங்கள் ஏராளமாக உள்ளன. இந்த விலங்குகளை நேரில் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். இவ்வளவு பெருசா என அசந்து போய்டுவீங்க. அந்த வகையில், அதிக எடைகொண்ட விலங்கு எதுவென்று உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க எந்த விலங்கை நேரில் பார்த்து இருக்கீங்க? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 24, 2025
VHT: ஒரே நாளில் 22 சதங்களை அடித்து மிரட்டல்

விஜய் ஹசாரேவின் தொடக்க நாளான இன்று பேட்ஸ்மேன்கள், பவுலர்களுக்கு பெரும் சவாலாக இருந்தனர். நட்சத்திர வீரர்களான <<18659415>>ரோஹித்<<>>, விராட் தொடங்கி, இளம் நட்சத்திரங்களான வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், படிக்கல் என 22 பேர் ஒரே நாளில் சதம் அடித்துள்ளனர். இதில் ஒடிசா வீரர் ஸ்வாஸ்டிக் சமல் இரட்டை சதம் அடித்து மிரள வைத்தார். VHT தொடர் முதல் நாளில் இருந்தே அனல் பறக்க தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


