News December 18, 2025

தென்காசி வேலை தேடுவோர் நாளை மறக்காதீங்க!

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (டிச.19) அன்று காலை 10 மணி முதல் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து இம்முகாமில் நேரடியாக கலந்துகொள்ளலாம். இதை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 28, 2025

தென்காசி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

தென்காசி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க..

News December 28, 2025

தென்காசி: காவலர் தற்கொலை!

image

சங்கரன்கோவில் அருகே இருமன்குளத்தை சேர்ந்த சந்தனபாண்டி மகன் சுந்தர்(31). இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றினார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லைய அரசு மருத்துவமனை அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

News December 28, 2025

தென்காசி மக்களே ரூ.78,000 மானியம் இன்றே APPLY பண்ணுங்க

image

தென்காசி மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3கிலோ வாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <>இந்த லிங்க<<>> மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!