News December 18, 2025
விடுமுறை.. நாளை முதல் 3 நாள்களுக்கு HAPPY NEWS

வார விடுமுறையையொட்டி, மக்களின் வசதிக்காக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல, நாளை முதல் டிச.21 வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 1,000 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 20,000 பேர் வரை டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in இணையதளம் (அ) TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்து உங்கள் பயணத்தை ஈசியாக்குங்க நண்பர்களே!
Similar News
News December 24, 2025
நகைக் கடன்.. முக்கிய அறிவிப்பு வெளியானது

2025-ல் மார்ச் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வங்கிகளில் நகைக் கடன் அளவு இருமடங்காக அதிகரித்து வருகிறது. தற்போது, தங்கத்தின் விலை நிலையற்றதாக உள்ள நிலையில், நகைக் கடன் வழங்கும்போது எச்சரிக்கையாக இருக்க RBI அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து, வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நகை கடன் மதிப்பு <<18646177>>வரம்புகளை குறைக்கத் தொடங்கியுள்ளன.<<>> இதனால், அதிகளவில் கடன் பெற முடியாமல் நடுத்தர மக்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
News December 24, 2025
கடற்படை ரகசியங்களை Pak-க்கு விற்ற நபர் கைது

இந்திய கடற்படையின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு கடத்திய கும்பலை கர்நாடக போலீசார் அதிரடியாக முடக்கி வருகின்றனர். ஏற்கனவே இருவர் பிடிபட்டுள்ள நிலையில், குஜராத்தை சேர்ந்த ஹிரேந்திரகுமார் என்பவரை தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் பணத்திற்காக ரகசியங்களை விற்றது தெரிய வந்துள்ள நிலையில், UAPA உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
News December 24, 2025
சமூக நீதியை வென்றெடுப்போம்: விஜய்

பெரியாரின் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். தனது X பதிவில், பெரியார் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம் என அவர் கூறியுள்ளார். மேலும், சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறிய போராடியவர் பெரியார் என்றும் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.


