News December 18, 2025

திருச்சி TaTa COATS நிறுவனத்தில் வேலை ரெடி.!

image

திருச்சியில் உள்ள TaTa COATS நிறுவனத்தில் AutoCAD 2D, 3D & SolidWorks பணியிடத்திற்கு 5 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆண், பெண் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். ஐடிஐ, டிப்ளமோ முதல் ஏதேனும் ஒர் டிகிரி படித்தவர்கள் ஜனவரி மாதம் 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அறிய 89258-97701 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News December 28, 2025

திருச்சி: திருமண தடையை நீக்கும் அற்புத கோவில்

image

திருச்சி, பொன்மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற பொன்னேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. திருமண தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் இக்கோயிலில் உள்ள பால் கிணற்றில் நீராடி அன்னைக்கு அபிஷேகம் செய்தால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. நீங்கள் இக்கோயிலுக்கு சென்றது உண்டா? மேலும் உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE செய்யவும்!

News December 28, 2025

திருச்சி: லைசன்ஸை, ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

image

திருச்சி மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உடனே <>Mparivaahan<<>> செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை உங்கள் போனில் ஈஸியா பெறலாம். இந்த டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரப்பூர்வம் என்பதால், போலீசாரிடமும் லைசன்ஸை, ஆர்.சி புக் டிஜிட்டல் ஆவணங்களை காண்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 28, 2025

‘பாஜக-வுடன் கூட்டணி கிடையாது’ – திருச்சியில் டிடிவி தினகரன்

image

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அதில், ‘அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைந்தால் தான் வெற்றி சாத்தியமாகும். எந்த ஒரு அழுத்தம் கொடுத்தாலும் பாஜகவால் தங்களை கூட்டணிக்குள் இணைக்கமுடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் பல கட்சிகள் தங்களது கூட்டணிக்கு சேர அமமுகவை அழைத்து வருகிறது’ என்றார்.

error: Content is protected !!