News December 18, 2025
நாளைய தமிழகமே விஜய்தான்: KAS

நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் என்று ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் செங்கோட்டையன் சூளுரைத்துள்ளார். இது சாதாரணமாக கூடிய கூட்டம் அல்ல, எதிர்கால தமிழகத்தை உருவாக்க கூடிய கூட்டம் எனக் கூறிய அவர், ஆண்டுக்கு 500 கோடி ரூபாயை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வந்துள்ளார். அவர் (விஜய்) கை நீட்டும் நபர்கள்தான் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
Similar News
News December 24, 2025
Profit-Sharing முறையில் ‘பாரத் டாக்ஸி’: அமித்ஷா

‘பாரத் டாக்ஸி’ சேவை விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். Profit-Sharing முறையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த சேவையில் கிடைக்கும் வருமானம் அனைத்தும் நேரடியாக டிரைவர்களுக்கு செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார். தனியார் நிறுவனங்களை காட்டிலும் இதில் கட்டணம் குறைவாக இருக்கும் எனவும், ஜனவரி 1-ல் முதற்கட்டமாக டெல்லியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
News December 24, 2025
அனைத்து மகளிருக்கும் ₹50,000.. அதிரடி அறிவிப்பு

புதுச்சேரியில் பெரிய கட்சிகள் வியக்கும் அளவுக்கு, ஜோஸ் சார்லஸின் LJK தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு ₹35,000 நிதி உதவியும், குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ₹20,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பெண்களுக்கும் ஆண்டுக்கு ₹50,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
News December 24, 2025
நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் ரஷ்யா!

2036-ம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையத்தை கட்டமைக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. நிலவில் நீண்டகால ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கும், ரஷ்யா – சீனா கூட்டு ஆய்வு மையத்தை நிறுவுவதற்கும் தேவைப்படும் மின்சாரத்தை, அங்கு அமைக்கும் அணுமின் நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. விண்வெளி ஆய்வில் US-ஐ விட ரஷ்யா பின்தங்கி வரும் நிலையில், இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


