News April 30, 2024
திகார் சிறையில் மந்திரியுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, நேற்று அவரது மனைவி மற்றும் டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி ஆகியோர் சந்தித்துள்ளனர். முதலில் அனுமதி மறுத்த சிறை நிர்வாகம், பின்னர் அனுமதி அளித்தது. இந்த சந்திப்பில், டெல்லி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும், குடிநீர் வினியோகத்தை மேம்படுத்துமாறும் கெஜ்ரிவால் வலியுறுத்தியதாக அதிஷி தெரிவித்தார்.
Similar News
News February 1, 2026
செமி கண்டக்டர் மிஷன் 2.0 திட்டத்துக்கு ₹40,000 கோடி

இந்தியாவை உலகளாவிய உயிரி மருந்து உற்பத்தி மையமாக மேம்படுத்த, ‘பயோ பார்மா சக்தி’ திட்டத்தை அறிமுகப்படுத்தி ₹10,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார் FM நிர்மலா சீதாராமன். இது உயிரியல் மற்றும் உயிரி மருந்துகளின் உற்பத்தியை உள்நாட்டிலேயே செய்யும் சூழலை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், Semi Conductor Mission 2.0-வுக்காக ₹40,000 கோடியை அவர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
News February 1, 2026
சிகரெட் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 40% GST வரி உயர்வுடன் சிகரெட், பான் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, சாதாரண சிகரெட் (65 mm) ₹2.10, Medium சிகரெட் (70mm) ₹4, பிரீமியம் சிகரெட் (75 mm) ₹5.40 வரை விலை உயர்ந்து விற்பனையாகலாம் என கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் புகை பிடிப்போர் கலக்கம் அடைந்துள்ளனர். (ADVISORY: சிகரெட் புகைக்காதீர்)
News February 1, 2026
BUDGET 2026: தமிழ்நாட்டில் அரியவகை தாது வழித்தடம்

அரியவகை தாது வழித்தட திட்டத்துக்கு ₹40,000 கோடி ஒதுக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசாவில் இந்த அரியவகை தாது வழித்தடம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு ₹10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.


