News April 30, 2024

நடிகை அம்ரிதா தற்கொலை; வெளியான உண்மை

image

நடிகை அம்ரிதா பாண்டே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போஜ்புரி, ஹிந்தி மொழிப் படங்களில் நடித்த இவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு சில மணி நேரம் முன்பு தனது வாட்ஸ் அப்பில், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதை ஸ்டேட்டஸ் மூலம் மறைமுகமாக பதிவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News

News February 4, 2026

இந்திய சந்தையை US-க்கு வாடகைக்கு விட்டதா? சு.வெ.,

image

இந்திய-US வர்த்தக ஒப்பந்தத்தில் PM மோடி சரணாகதி அடைந்தார் என்பதை US செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளதாக MP சு.வெங்கடேசன் சாடியுள்ளார். ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாக பியூஷ் கோயல் கூறும் நிலையில், அதற்கு மாறாக இந்தியா ஒப்புக்கொண்ட முடிவுகளை US அதிகாரி பட்டியலிடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்தியாவின் நிர்வாகத்தை US-க்கு உள் வாடகைக்கு விட்டதா BJP எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

News February 4, 2026

U19 WC: இந்திய அணி பவுலிங்

image

U19 WC-ல் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி நிதானமாக விளையாடி வரும் ஆப்கன் அணி 8 ஓவர்களில் 34 ரன்களை எடுத்துள்ளது. இதுவரை லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத இந்தியா, இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 4, 2026

அஜித்குமார் மரணம்.. பரபரப்பான புதிய தகவல்

image

தமிழகத்தையே உலுக்கிய காவலாளி அஜித்குமார் மரணம் ‘காவல் மரணமே’ என்று CBI தரப்பு மதுரை HC அமர்வில் தெரிவித்துள்ளது. அதேநேரம், இவ்வழக்கில் அஜித்குமார் நகை திருடியதாக நிகிதா அளித்த புகாரும் பொய்ப் புகார் தான் என்றும் கோர்ட்டில் CBI கூறியுள்ளது. இதனையடுத்து, ஒன்றுமே இல்லாத வழக்கில் ஒருவரை அடித்துக் கொலை செய்துவிட்டதாக காட்டமாக கூறிய கோர்ட், போலீஸார் சிறையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!