News December 18, 2025

கிருஷ்ணகிரி: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (19.12.2025, வெள்ளிக்கிழமை) காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார் தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தின் 2வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இக்கூட்டம் நடைபெறும். மேலும் இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவிக்கலாம்.

Similar News

News December 27, 2025

கிருஷ்ணகிரியில் துடிதுடித்து பலி!

image

தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகா சேசுராஜபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் ஜான்பால்(27). விவசாயியான இவர் கடந்த டிச.25ஆம் தேதி பைக்கில் தப்பகுளி(32) என்பவருடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது நாட்ராம்பாளையம் – அஞ்செட்டி சாலையில் நிலைதடுமாறி பைக் கவிழ்ந்ததில் படுகாயமடைந்த ஜான்பால், சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி உயிரிழந்தார். தப்பகுளி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

News December 27, 2025

கிருஷ்ணகிரி வாக்காளர்கள் கவனத்திற்கு!

image

கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற உள்ளது. இதற்காக 2025 டிசம்பர் 27, 28 மற்றும் 2026 ஜனவரி 3, 4 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். புதிய வாக்காளர் பதிவு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தேர்தல் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News December 27, 2025

கிருஷ்ணகிரி: கல்லூரி மாணவி பரிதாப பலி!

image

திருவண்ணாமலை சாலையைச் சேர்ந்தவர் சபரீசன். இவருடைய மகள் தனுஸ்ரீ(17). இவர் கேரள மாநிலம், பாலக்கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி தந்தையுடன் பைக்கில் சென்ற அவர், சப்பாணிப்பட்டி அருகே சென்றபோது சரக்கு வேன் மோதியதில் படுகாயமடைந்த தனுஸ்ரீ சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சபரீசன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!