News April 30, 2024

கள்ளச்சந்தையில் IPL டிக்கெட் விற்ற 8 பேர் கைது

image

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பெற போலீசார் கைது செய்துள்ளனர். CSK-SRH இடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியைக் காண வந்த ரசிகர்களிடம், சிலா் அதிக விலைக்கு டிக்கெட் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சரவணன், நவீன் குமார் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து ரூ.72,242 மதிப்புள்ள 26 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Similar News

News February 7, 2026

FLASH: தங்கம் விலை மீண்டும் குறைகிறது

image

சர்வதேச சந்தையில் <<19072118>>காலையில் ஏறுமுகத்தில்<<>> இருந்த தங்கம் தற்போது இறங்குமுகத்தில் உள்ளது. அதன்படி காலையில் $4,966-க்கு விற்பனையான 1 அவுன்ஸ்(28g) தற்போது $79 குறைந்து $4,887 ஆக உள்ளது. இதே நிலை நீடித்தால், நம்மூர் சந்தையில் <<19073108>>காலையில் உயர்ந்த<<>> விலையில் மாலை நேர வர்த்தகத்தில் சற்று குறைய வாய்ப்புள்ளது. நாளை தங்கம் மார்க்கெட் விடுமுறை என்பதால் இதே நிலை நீடிக்கவும் வாய்ப்புள்ளது.

News February 7, 2026

இந்த படங்களில் டாப் 3 எது? Evergreen சாய்ஸ்

image

‘லாலலலலலாலா..’ என்ற ஒரு எழுத்து போதும், இவருடைய படங்களில் மகிழ்ச்சி, சோகம், வருத்தம், காதல் என அனைத்தையும் உணர்ந்துவிடலாம். அப்படியான உணர்வுகளை இன்றைய AI உலகில் வாழும் அனைவரும் ஏற்கும் படைப்புகளை கொடுத்தவர் தான் விக்ரமன். இந்த படங்களில் தனது டாப் 10-ஐ விக்ரமன் கூறியுள்ளார். நீங்கள் எந்த படங்களுக்கு முதல் 3 இடங்களை அளிப்பீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்.

News February 7, 2026

OPS-ன் புதிய அவதாரம் இதுவா? இப்படி இறங்கிட்டாரே!

image

தனித்து விடப்பட்ட OPS, அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு இனி ஏலக்காய் பிஸினஸை வளர்க்கும் பணியில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவுக்கும், தவெகவுக்கும் செல்ல வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் அவரிடம், நல்ல பதவி தருவதாக பாஜக பேச்சுவார்த்தை நடத்துவதால், அதுகுறித்த பரிசீலனையில் இருப்பதாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில், OPS தொழிலை வளர்ப்பாரா (அ) பாஜகவில் இணைவாரா என கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!