News December 18, 2025

உதகை அருகே விபத்து

image

நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே இன்று காலை சாலையின் பக்கவாட்டு சுவரில் மோதி கார் விபத்துக்குள்ளானது காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர் உடனடியாக அங்கு விரைந்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News January 15, 2026

நீலகிரி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 15, 2026

உதகை அருகே விபத்து

image

உதகையிலிருந்து மைசூர் நோக்கி நேற்ற பிக்கப் வேன் ஒன்று கல்லட்டி மலைப்பாதையில் விபத்தில் சிக்கியது. வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், ஓட்டுநர் சாலையோர தடுப்பு சுவரில் மோதி வாகனத்தை நிறுத்தினார். இவ்விபத்தில் ஓட்டுநர் குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 15, 2026

உதகையில் அதிரடி காட்டிய அதிகாரிகள்

image

உதகை படகு இல்லம் பகுதியில் சுற்றுலா பேருந்தில் தண்ணீா் பாட்டில்கள் எடுத்து வரப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு நகராட்சி ஊழியா்கள் சோதனை செய்த போது, மகாராஷ்டிரா மாநிலத்தை சோ்ந்த சுற்றுலா பேருந்தில் 400-க்கும் மேற்பட்ட அரை லிட்டா் தண்ணீா் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதை பறிமுதல் செய்ததுடன், ரூ.45,000 அபராதம் விதித்தனா்.

error: Content is protected !!