News December 18, 2025

நாகை: அரிய வகை சிவப்பு மூக்கு ஆளான் பறவை மீட்பு

image

நாகை புதிய கடற்கரையில் காயமடைந்த பறவை மீட்ட வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ரயில்வே கேட் பகுதியில் காயம் அடைந்த அரியவகை பறவையை நாய்கள் பிடிக்க துரத்தியுள்ளது. இதை பார்த்த புதிய கடற்கரை பொறுப்பாளர் தேவராஜ் அந்த பறவை நாய்களிடமிருந்து மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார். இதை அடுத்து நாகை வனசரக அலுவலர் சியாம் சுந்தர் உத்தரவில் காயமடைந்த பறவைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News

News December 22, 2025

நாகை: கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில் அறிவிப்பு

image

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ரயிலானது செகந்தராபாத்திலிருந்து (ஐதராபாத்) நாளை (டிச.23) இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு சென்னை, விழுப்புரம், காரைக்கால், நாகூா், நாகை வழியாக டிச.24 மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமாா்கத்தில் வேளாங்கண்ணியிலிருந்து டிச.25 அன்று காலை 8 மணிக்கு புறப்பட்டு, அதே வழியில் டிச.26 காலை 6.10 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 22, 2025

நாகை: கோடி கணக்கில் போதை பொருள் கடத்தல்!

image

இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வேளாங்கண்ணி பேராலய காா் நிறுத்தும் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த ரவிச்சந்திரன் (40), ஆனந்தராஜ் (33), காஞ்சிநாதன் (31) ஆகியோரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள 2 கிலோ மெஸ்கலின் என்ற போதைப் பொருள் இருந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News December 22, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.21) இரவு 10 மணி முதல் இன்று (டிச.22) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!