News December 18, 2025
இந்திய சினிமாவின் First.. சூர்யா 47-ல் புது டெக்னாலஜி

சூர்யா 47 படத்தில் இந்திய சினிமாவிலேயே இதுவரை இல்லாத புதிய முயற்சி ஒன்று செய்யப்பட்டு வருகிறது. படத்தை ARRI Alexa 265 கேமராவில் படமாக்கி வருகிறார்கள். தற்போதைய டெக்னாலஜியில் பெரிய திரைக்கு ஏற்ற பிரீமியம் கேமரா இதுவாம். ஹாலிவுட்டில் The Revenant, Rogue One போன்ற படங்களில் இக்கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 படத்தில் நஸ்லன், நஸ்ரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
Similar News
News January 16, 2026
இது ரோஹித்துக்கு செய்த அவமரியாதை: மனோஜ் திவாரி

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நிலையிலும், ரோஹித் கேப்டன்சியில் இருந்து நீக்கியதற்கு பின்னணியில் பயிற்சியாளர் கம்பீர் இருந்திருக்கலாம் என்று மனோஜ் திவாரி சந்தேகம் தெரிவித்துள்ளார். ரோஹித் போன்ற ஒரு ஜாம்பவானை ஓரங்கட்டுவது விளையாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும் ODI கேப்டன்சியில் இருந்து நீக்கியது ரோஹித்துக்கு செய்த அவமரியாதை என்றும் கடுமையாக விமர்சித்தார்.
News January 16, 2026
பிரபல நடிகர் காலமானார்.. அதிர்ச்சியூட்டும் காரணம்

ஜன.9-ல் காலமான பிரபல ஹாலிவுட் நடிகர் டி.கே.கார்டர் (69) நீண்ட நாள்களாக சர்க்கரை நோய், இதயநோய் பிரச்னைகளால் கார்டர் அவதிப்பட்டு வந்ததாக அவரது சகோதரர் ஹரால்ட் கூறியுள்ளார். அதுவே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்றும், உடலை மீட்ட போது தலையில் காயம் இருந்ததாகவும் அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இவரது மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவருக்கு SM-ல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News January 16, 2026
பாலமேடு ஜல்லிக்கட்டு.. முதல் பரிசாக ₹8 லட்சத்தில் கார்

கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துகொண்டு, காளைகளை அடக்கிய வீரர்களுக்கு முதல் பரிசாக ₹8 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் 2&3 பரிசாக பைக் ஆகியவை வழங்கப்பட்டன. பரிசு விவரம்: 3-ம் பரிசு நாமக்கல் கார்த்தி (11 காளைகள்), 2-ம் பரிசு பிரபாகரன் (16 காளைகள்), முதல் பரிசு பொந்துகம்பட்டி அஜித் (16 காளைகள்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


