News December 18, 2025

தஞ்சை: கொள்முதல் நிலையத்தில் வேலைவாய்ப்பு!

image

தஞ்சை மண்டலத்தில் நடப்பு 2025-26 சம்பா பருவத்தில் உற்பத்தியாகும் நெல்லை கொள்முதல் செய்திட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் நிலையில் பணிபுரிய விருப்பமுள்ள நுகர்பொருள் வாணிபக்கழக பணியில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் தற்காலிகமாக பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 26, 2025

தஞ்சை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சை மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News December 26, 2025

தஞ்சை: பணம் வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்கு

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே குலமங்கலம் மாரியம்மன் கோயில் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட கவியரசன்(48), திருநாவுக்கரசு(38), பிரசாந்த்(34), ரமேஷ்(39), வசந்தகுமார்(36), நித்துவான்(34) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News December 26, 2025

தஞ்சை: ரோடு சரியில்லையா? சரி செய்ய எளிய வழி!

image

தஞ்சை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். ‘<>நம்ம சாலை’<<>> என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, சேதமடைந்த சாலைகள் குறித்து உங்களால் புகைப்படங்களுடன் புகார் தெரிவிக்க முடியும். மாவட்ட சாலைகள் என்றால் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. ஷேர்

error: Content is protected !!