News April 30, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

▶பாஜகவில் இணைந்தவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை: பிரதமர் மோடி
▶செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
▶INDIA கூட்டணி ஆட்சி அமைத்தால் முதல்வர் ஸ்டாலின் பிரதமராக இருப்பார்: அமித் ஷா
▶முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு
▶தலைநகரை கொலைநகராக மாற்றி விடாதீர்கள்: டிடிவி தினகரன்
▶தேர்தல் நேரத்தில் சி.ஏ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: வைகோ
Similar News
News August 27, 2025
தமிழக பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

ஆகஸ்ட் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. செப்.5-ம் தேதி(வெள்ளிக்கிழமை) மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறையாகும். பின்னர், செப்.6(சனிக்கிழமை), செப்.7(ஞாயிற்றுக்கிழமை) என 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. செப். 2-வது வாரத்தில் <<17524777>>காலாண்டு தேர்வு<<>> என்பதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக இந்த தொடர் விடுமுறை பயனுள்ள வகையில் அமையும்.
News August 27, 2025
விஜய்யின் அடுத்த மாஸ்டர் பிளான்

மதுரை மாநாட்டை தொடர்ந்து விஜய் அடுத்தகட்டமாக மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கவுள்ளார். செப்டம்பரில் திருச்சியில் தொடங்கி, 234 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியவாறு இந்த பயணம் அமையவுள்ளது. இதற்காக நவீன வசதிகளுடன் கூடிய பிரசார வாகனத்தை தவெக வாங்கியுள்ளது. இதையடுத்து விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்திற்கான ஏற்பாடுகளில் திருச்சி தவெக நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
News August 27, 2025
பிரபல நடிகர் ஜாய் பானர்ஜி காலமானார்

பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான ஜாய் பானர்ஜி(62) காலமானார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், புகழ்பெற்ற மிலன் திதி, நாக்மதி, சாப்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாஜகவில் இணைந்த இவர், 2014 லோக்சபா தேர்தலில் பிர்பும் தொகுதி, 2019 தேர்தலில் உலுபேரியா தொகுதியில் BJP சார்பில் போட்டியிட்டு TMC-யிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜாய் பானர்ஜி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP