News December 18, 2025
தேனியில் 30க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் மற்றும் புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் 17.12.2025 இன்று 30க்கும் மேற்பட்டோர் கம்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழர் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர் இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 29, 2025
தேனி: தாய், மகனை கடத்தி கொலை மிரட்டல்!

தேனியை சேர்ந்தவர் மல்லிகா (58). இவர் தூத்துக்குடியை சேர்ந்த ராஜபாண்டியிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கிவிட்டு, கடந்த 2 மாதங்களாக வட்டி கட்டாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் ராஜபாண்டி 5 பேருடன் மல்லிகா வீட்டில் அத்துமீறி நுழைந்து, மல்லிகா, அவரது மகன் துர்கேஷை தாக்கி 15 பவுன் நகை, ரூ.50,000 எடுத்துள்ளனர். பின் காரில் கடத்தி திருமங்கலம் பகுதியில் இறக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
News December 29, 2025
தேனி: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

தேனி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News December 29, 2025
தேனி: மனைவி குறித்து தவறாக பேச்சு – இளைஞருக்கு கத்திகுத்து

கம்பம் பகுதியை சேர்ந்தவர் விக்ரமன் (25). இவரது மனைவியை அதே பகுதியில் வசிக்கும் அசோக் (20) என்பவர் தவறாக பேசியுள்ளார். இதுகுறித்து விக்ரமன் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அசோக், விக்ரமனின் மார்பில் கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த விக்ரமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அசோக்கை போலீசார் கைது செய்தனர்.


