News December 18, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி இன்று (டிச-17) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News December 25, 2025
வேலூர்: POLICE லஞ்சம் கேட்டால் உடனே CALL!

வேலூர் மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இது குறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (0416-2220893) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 25, 2025
வேலூர்: வீடு புகுந்து நகை, கிறிஸ்துமஸ் துணிகள் திருட்டு!

குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் டி.மோகன். பேரணாம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டில் பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் பட்டுப்புடவைகள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாங்கிய புது துணிகள் ஆகியவை திருட்டு போயிருப்பதை கண்டு திடுக்கட்டார். இந்த திருட்டு சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 25, 2025
வேலூர்: மது பதுக்கி விற்ற பெண் கைது!

வேலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வேலூர் சலவன்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த கோதாவரி என்கிற பூங்கோதை (47) என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


