News December 18, 2025
ஶ்ரீரங்கம்: வீடு தேடி வந்து பார்சல் பெறும் திட்டம் அறிவிப்பு

திருச்சி ஶ்ரீரங்கம் தபால் நிலையத்தில் வீடு தேடி வந்து பார்சல் பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடு, உள்நாடுகளுக்கு பார்சல் அனுப்ப விரும்பும் ஶ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் 0431-2436933 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், இருப்பிடத்திற்கு வந்து பார்சல்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்படும் என கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஜோஸ்பின் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 14, 2026
திருச்சி: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

திருச்சி மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 14, 2026
திருச்சி: வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவிதொகை வழங்கும் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியுடைய நபர்கள் வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி கல்லூரி மாற்று சான்றிதழ், அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
திருச்சி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் வரும் 16 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FL1, FL2, FL3, FL3A, FL3AA & FL11 ஆகியவை மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


