News December 17, 2025
சற்றுமுன்: நாடு முழுவதும் பறந்தது உத்தரவு

நாடு முழுவதும் பால் & பால் பொருள்களில் கலப்படம் நடப்பதை தடுக்க சிறப்பு அமலாக்க பணியை தொடங்க, அனைத்து மாநில அரசுகளுக்கும் FSSAI உத்தரவிட்டுள்ளது. பனீர், கோவா ஆகியவற்றில் நடக்கும் கலப்படம் & தவறான பிராண்டிங் குறித்து ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் பால் பொருள்கள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 19, 2025
சென்னை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News December 19, 2025
கோலியின் சாதனையை முறியடிப்பாரா அபிஷேக்?

IND, SA இடையே இன்று 5-வது டி-20 போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
இதில் அபிஷேக் சர்மா, கோலியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. ஒரு ஆண்டிற்குள் T20-ல் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை கோலியின் வசம் உள்ளது. அவர் 2016-ல் 1,614 ரன்கள் (IND, RCB) அடித்துள்ளார். நடப்பாண்டில் 1,568 ரன்கள் எடுத்துள்ள அபிஷேக் (IND, PUN, SRH) கூடுதலாக 47 ரன்கள் எடுத்தால் அச்சாதனை தகர்க்கப்படும்.
News December 19, 2025
லெஜண்ட் பாடிபில்டர் உயிரை குடித்த மாரடைப்பு!

உலக புகழ்பெற்ற பாடிபில்டர் Wang Kun(30) திடீர் மாரடைப்பால் காலமானார். இவர் சீன பாடிபில்டிங் சாம்பியன்ஷிப்பை தொடர்ச்சியாக 8 முறை வென்றுள்ளார். கடின உடற்பயிற்சி, தீவிர டயட்டை என உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பல பாடிபில்டர்கள் மாரடைப்பால் மரணமடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபரில் இந்தியாவை சேர்ந்த பாடிபில்டர் <<17961776>>வரீந்தர் சிங்<<>>கும் மாரடைப்பால் காலமானார் என்பது நினைவுகூறத்தக்கது.


