News December 17, 2025

மதுரை: கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு ரயில்

image

கிறிஸ்துமஸ் முன்னிட்டு தெற்கு ரயில்வே, நெல்லையிலிருந்து (06166) ரயில் டிசம்பர் 28, ஜனவரி 4 அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சேரும். தாம்பரம்–திருநெல்வேலி (06165) ரயில் டிசம்பர் 29, ஜனவரி 5 அன்று மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு திருநெல்வேலி சேரும். மதுரை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

Similar News

News February 1, 2026

மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பாதை மாற்றம்

image

தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் வழித்தடங்களில் பிப்ரவரி மாதத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக, மும்பை விரைவு ரயில் ஹௌரா அதிவிரைவு ரயில் (எண்:12666) மற்றும் ஹைதராபாத் செல்லும் ரயில் (எண்:07229) ஆகியவை மதுரை, திண்டுக்கல் வழித்தடத்துக்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, திருச்சி வழியாக இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News February 1, 2026

மதுரை: இதை தெரிஞ்சுக்க இனி அலையாதீங்க.. ஒரு CLICK போதும்

image

மதுரை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News February 1, 2026

மதுரை: மாடியிலிருந்து விழுந்த தொழிலாளி பலி.!

image

மேலூரைச் சேர்ந்தவர் சரவணன் 57 கட்டட தொழிலாளியான இவர், ஜெய்ஹிந்த்புரம் தென்றல் நகர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வீட்டில் கட்டிடத்தில் வேலை செய்து வந்தார். ஜன.28ம் தேதி அன்று சரவணன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!