News December 17, 2025
மெஸ்ஸிக்கு ₹11 கோடி வாட்ச்-ஐ பரிசளித்த அம்பானி

மெஸ்ஸி நேற்று குஜராத்தில் அனந்த அம்பானியை சந்தித்தார். இந்த சந்திப்பில், அனந்த் அம்பானி மெஸ்ஸிக்கு, ரிச்சர்ட் மில்லே RM 003 V2 வாட்ச்-ஐ பரிசளித்தார். இதன் மதிப்பு சுமார் ₹10.91 கோடி. இந்த வரையறுக்கப்பட்ட ஏசியன் எடிஷன் வாட்ச், உலகில் 12 மட்டுமே உள்ளன. இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மெஸ்ஸி, அனந்த அம்பானியுடன், வந்தாரா வனவிலங்குகள் மையத்தை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தார்.
Similar News
News December 22, 2025
திமுக அரசு இந்து எதிர்ப்பு ஆட்சி நடத்துகிறது: H ராஜா

தமிழகத்தில் தற்போது இந்து எதிர்ப்பு ஆட்சியே நடக்கிறது என்று H ராஜா விமர்சித்துள்ளார். கோயில் சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை பெருமளவில் கொள்ளையடித்துள்ளது என குற்றஞ்சாட்டிய அவர், திருச்செந்தூர் உள்பட பல கோயில்களில் முறையான அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றார். முருகனுக்கு எதிரான அரசை நடத்தும் இவர்களுக்கு, 2026 தேர்தலில் முருக பக்தர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் சாடினார்.
News December 22, 2025
மத்திய பட்ஜெட்டில் உங்கள் ஐடியாக்களை கூறலாம்!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2026 – 2027, அடுத்த ஆண்டு பிப்.1-ல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், மத்திய பட்ஜெட் 2026-27-ல் வரவேண்டிய முக்கிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துகளை பகிரலாம் என அரசு அழைப்பு விடுத்துள்ளது. எனவே, நாட்டின் முன்னேற்றத்திற்கு உங்களின் கருத்துகள் மூலம் பங்களிக்க விரும்புவோர், இங்கே <
News December 22, 2025
CM விவகாரத்தை அவர்களே தீர்க்க வேண்டும்: கார்கே

கர்நாடக CM இருக்கைக்கான மோதல்போக்கு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், காங்., மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று CM சித்தராமையா & DCM சிவக்குமார் என இருவருமே கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாநில தலைவர்களே பேசி தீர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று காங்., தேசிய தலைவர் கார்கே கூறியுள்ளார். இதனால் விரைவில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.


