News December 17, 2025
கிருஷ்ணகிரி: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

கிருஷ்ணகிரி மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!
Similar News
News December 25, 2025
கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி… ஒரே நாளில் 5 வீடுகளில் கொள்ளை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சுண்டம்பட்டியில் இன்று அதிகாலை கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்ற 5 பேரின் வீடுகளுக்குள் புகுந்து மர்ம நபர்கள்
கொள்ளை அடித்து சென்றுள்ளனர். 30 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி மற்றும் பணம் திருடிச் சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், பர்கூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 25, 2025
கிருஷ்ணகிரி: ஆம்புலன்ஸ் அப்பளம் போல் நொறுங்கி விபத்து!

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் நெடுஞ்சாலையில், இன்று(டிச.25) அதிகாலை 5.30 மேல் சின்னர் என்னும் இடத்தில் பிரேக் டவுன் ஆன லாரியின் மீது கேரளாவை சேர்ந்த ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த வாகனத்தை இயக்கிய ஜோஜி என்பவர் வாகனத்தின் உள் சிக்கிக்கொண்டார். 1:30 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு 108 & தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு அவரை மிட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
News December 25, 2025
கிருஷ்ணகிரி: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆன்டு செப்., மாதம் பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <


