News December 17, 2025
காஞ்சிபுரம்: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

காஞ்சிபுரம் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
Similar News
News December 26, 2025
காஞ்சிபுரத்தில் இடியாப்பம் விற்பவர்களுக்கு உரிமம் கட்டாயம்.

காஞ்சிபுரத்தில் சைக்கிள், பைக் போன்ற இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பவர்கள் இனி தமிழக உணவு பாதுகாப்புத்துறை உரிமம்/பதிவு (FSSAI) பெற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவு சுகாதாரத்தை உறுதி செய்து, மக்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக துறை தெரிவித்துள்ளது. உரிமம் ஆண்டுதோறும் புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 25, 2025
காஞ்சி: பொருளாதார சிக்கலா! இங்க போங்க

காஞ்சிபுரம் மாவட்டம் வடபாதியில் பூமாத்தம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் பூமாத்தம்மனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடையலாம் என நம்பப்படுகிறது. மேலும், பூமாத்தம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. பொருளாதார சிக்கலில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்
News December 25, 2025
காஞ்சி: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

காஞ்சிபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


