News December 17, 2025
கொடுத்த பணத்தை திருப்பி கேட்கும் அரசு

பிஹாரில் மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டத்தில் 1.40 கோடி மகளிரின் வங்கி கணக்குகளில் தலா ₹10,000 செலுத்தப்பட்டது. அப்போது, தர்பங்கா கிராமத்தில் சில ஆண்களின் கணக்கிலும் தவறுதலாக ₹10,000 செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதை திரும்ப பெற கிராமத்துக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளனர் உள்ளூர் மக்கள். அந்த பணத்தை தீபாவளிக்கே செலவழித்துவிட்டதால் தங்களால் எப்படி தரமுடியும் என்றுள்ளனர்.
Similar News
News December 25, 2025
பவுமாவிடம் மன்னிப்பு கேட்ட பும்ரா, பண்ட்

SA உடனான டெஸ்ட்டின்போது, கேப்டன் <<18291955>>பவுமாவை<<>> பும்ராவும், பண்ட்டும் கேலி செய்தது சர்ச்சையானது. ஆனால், ஆட்டநேர முடிவில் இருவரும் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக பவுமா தெரிவித்துள்ளார். களத்தில் கூறப்பட்டது, களத்தோடு விட்டுவிட வேண்டும், தனிப்பட்ட பகையாக எடுத்துக் கொள்ளk கூடாது எனவும், அதேபோல், இந்தியாவை மண்டியிட செய்வோம் என தங்கள் அணி பயிற்சியாளரும் பேசியிருக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 25, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 25, மார்கழி 10 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:00 AM – 1:00 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சஷ்டி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News December 25, 2025
9 பேர் பலி: CM ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

கடலூரில் நிகழ்ந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு CM ஸ்டாலின் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்துள்ளார். அத்துடன், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ₹3 லட்சம், படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தலா ₹1 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


