News December 17, 2025
ரஷ்மிகாவின் Bachelor Party? வைரல் போட்டோஸ்

நடிகை ரஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் திருமணம் செய்யப்போவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவருகின்றன. எனினும், இருவரும் அதுகுறித்து வாய்திறக்கவில்லை. இச்சூழலில்தான், தற்போது ரஷ்மிகா தனது நெருங்கிய நண்பர்களுடன் இலங்கைக்கு ட்ரிப் அடித்துள்ளார். இந்த போட்டோக்களை அவர் இன்ஸ்டாவில் பதிவிட, லைக்ஸ்களை ரசிகர்கள் குவித்து வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
இந்திய பொருள்களுக்கு உலகளவில் அங்கீகாரம்

இந்திய பொருள்களுக்கு புவிசார் குறியீடு(GI) வழங்குவதை எளிதாக்கும் வகையில் சட்டங்களை திருத்த நியூசிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது. IND, NZ இடையே கையெழுத்தான <<18642468>>தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்<<>> (FTA) கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனை முடிப்பதற்கான காலக்கெடு, FTA அமலுக்கு வந்ததிலிருந்து 18 மாதங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.
News December 25, 2025
தீராத முதுகுவலிக்கு இப்படி BYE சொல்லுங்க

முதுகு வலி இருப்பவர்கள் சில உடற்பயிற்சிகளை செய்தால், அது மேலும் வலியை அதிகரிக்க செய்யும். அதனால் எந்த உடற்பயிற்சி முதுகு வலியை நீக்கும் என தெரியாமல் தவிப்பர். இனி இந்த குழப்பம் வேண்டாம். தினமும் 78 நிமிடங்களுக்கு மேல் நடப்பவர்களுக்கு முதுகு வலி வருவதற்கான வாய்ப்பு 13% வரை குறைவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இத்துடன், கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் அவசியம். SHARE.
News December 25, 2025
FLASH: நடிகர் விநாயகன் ஹாஸ்பிடலில் அனுமதி

‘ஆடு 3’ படத்தின் ஷூட்டிங்கின்போது நிகழ்ந்த விபத்தில் பிரபல வில்லன் நடிகர் விநாயகன் காயமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தோள்பட்டை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து கொச்சியில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விநாயகன் விஷாலின் ‘திமிரு’, ரஜினியின் ‘ஜெயிலர்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லன் ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை வென்றார்.


