News December 17, 2025

9 லட்சம் இந்தியர்கள் எங்கே?

image

கடந்த 5 ஆண்டுகளில் (2020-2024) ஏறக்குறைய 9 லட்சம் மக்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் ராஜ்ய சபாவில் தெரிவித்துள்ளது. இது, அதற்கு முந்தைய 5 ஆண்டு காலத்தை (2015-2019) விட 30% அதிகம். குடியுரிமையை துறந்த இந்தியர்கள் எந்தெந்த நாடுகளில் குடியேறியுள்ளனர், என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

Similar News

News April 6, 2026

கடலூர்: 5,538 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு

image

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி என 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 3099 மூத்தகுடிமக்கள், 2439 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 5 ஆயிரத்து 538 பேர் தபால் வாக்கு அளிக்க படிவம் வழங்கி உள்ளனர். இவர்கள் தபால் வாக்கு அளிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News April 6, 2026

லோன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்

image

2026-27 ஆம் நிதியாண்டிற்கான முதல் நாணயக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் தொடங்கியுள்ளது. இதில், RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ரெப்போ ரேட் குறைப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து நாளை மறுநாள் அவர் அறிவிக்க உள்ளார். இதில், கடந்த ஆண்டைப்போல் இந்தாண்டும் ரெப்போ ரேட் குறைக்கப்பட்டால், வீடு, வாகன கடன் பெற்றவர்களுக்கு EMI குறையும்.

News April 6, 2026

கரூர் போல் சென்னையிலும்.. ஆதவ் பகீர் குற்றச்சாட்டு

image

<<19578094>>விஜய்யின் பிரசாரம் ரத்து<<>> செய்யப்பட்டதற்கு சென்னை கமிஷனர் அருணே காரணம் என ஆதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். தி.நகரில் மாலை 2-6 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி கொடுத்துவிட்டு, பின்னர் அதனை ரத்து செய்து மாலை 2-3 மணி வரை மட்டுமே அனுமதி தந்தார்கள் என அவர் தெரிவித்தார். ஸ்டாலினின் பேச்சை கேட்டுக்கொண்டு செயல்படும் கமிஷனர் அருண், கரூர் மாதிரியான பிரச்னையை சென்னையில் உருவாக்க முயற்சிக்கிறார் எனவும் கூறினார்.

error: Content is protected !!