News December 17, 2025

BREAKING: திமுக தேர்தல் அறிக்கை.. வந்தது அறிவிப்பு

image

கனிமொழி MP தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழு அமைத்து, கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. TKS இளங்கோவன், PTR பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். 2026 தேர்தல் களம் 4 முனை போட்டியாகவுள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் கவர்ச்சிகரமான திட்டங்களை திமுக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை உயர்வு குறித்தும் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News December 26, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு HAPPY NEWS

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்கள், மேல்முறையீடு செய்து வருகின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான ஆய்வுப் பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதில், உங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டால், குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அதன்பிறகு, மாதந்தோறும் 15-ம் தேதி உங்களது வங்கிக் கணக்கிலும் ₹1,000 டெபாசிட் செய்யப்படும். SHARE

News December 26, 2025

வேகமாக சீறிப்பாயும் மீன்கள் PHOTOS

image

வேட்டையாடும் மீன்கள் பெரும்பாலும் வேகமாக சீறிப்பாயும் தன்மை கொண்டவை. இரையை பிடிக்க மின்னல் போல் பாயும் மீன்கள் எவ்வளவு வேகத்தில் நீந்தும் என்று தெரியுமா? மேலே, வேகமான மீன்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்கள் பார்த்த வேகமான மீன் எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

News December 26, 2025

ரேஷன் கடைகளில் கேழ்வரகு மாவு இலவசம்: CM அறிவிப்பு

image

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக 1 கிலோ கேழ்வரகு மாவு வழங்கப்படும் என CM ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கெனவே, இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்பட்டுவரும் நிலையில், சத்துணவுக்காக கேழ்வரகு மாவை விலையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பச்சரிசி, நாட்டு சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு ஜன.3 முதல் புதுச்சேரியில் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!