News December 17, 2025

பூந்தமல்லிக்கு வருது மெட்ரோ ரயில்!

image

பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிக்னலுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சிக்னல் கட்டமைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஓரிரு நாட்களில் ரயில்வே வாரியம் வேக சான்றிதழ் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேக சான்றிதழ் கிடைத்தால் மேற்கண்ட பாதையில் ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை தீவிரமடையும்.

Similar News

News March 10, 2026

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் 500 மனுக்கள்

image

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று(மார்ச் 9) மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 48, மகளிர் உரிமை தொகை 63, சமூக பாதுகாப்பு திட்டம் 63, வேலைவாய்ப்பு வேண்டி 48, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் கோரி 27, இதர துறை 251 என, மொத்தம் 500 மனுக்கள் பெறப்பட்டன.

News March 10, 2026

திருவள்ளூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 10, 2026

திருவள்ளூர்: IDBI வங்கியில் 1300 காலியிடங்கள்! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

error: Content is protected !!