News December 17, 2025
வேலூரில் இலவச வக்கீல் சேவை!

வேலூர் மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 1) மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0416-2255599 2) தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3) Toll Free 1800 4252 441 4) சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 5) உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News December 27, 2025
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்.. கலெக்டர் ஆய்வு!

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (டிசம்பர் 27) வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் புதிய வாக்காளர் சேர்க்கை, முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News December 27, 2025
வேலூர்: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (0416-2220893) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
வேலூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


