News December 17, 2025

நாகை: நோய்களை நீக்கும் அற்புத கோவில்

image

நாகை மாவட்டம், வலிவலத்தில் மனத்துணைநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம் என்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கும் இறைவனை வழிபட்டால், உடலில் உள்ள நோய்கள், அதிலும் குறிப்பாக இதயம் சார்ந்த நோய்கள் நீங்கி, மன நிம்மதி பெருகும் என நம்பப்படுகிறது. இத்தகவலை உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்!

Similar News

News December 25, 2025

JUST IN நாகை: பஸ் – சரக்கு வாகனம் மோதி விபத்து

image

நாகை மாவட்டம், வேதாரணியம் அடுத்த மணக்காடு பகுதியில் தனியார் பேருந்தும், அவ்வழியே விற்பனைக்காக காய்கறிகளை ஏற்றி சென்ற சரக்கு வாகனமும் இன்று காலை மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர்த்தப்பினர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 25, 2025

நாகை: தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்

image

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய வட்டாட்சியர் எண்கள்:
1. வேதாரண்யம்-04369-250457,
2. திருக்குவளை-04365-245450,
3. கீழ்வேளூர்-04366-275493,
4. நாகப்பட்டினம்-04365-242456.
5. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 25, 2025

நாகை: ஆன்மீக சுற்றுலா அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள சப்தவிடங்க தலங்களுக்கு ஒரு நாள் பாரம்பரிய சுற்றுலா அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 04.01.2026 அன்று காலை 5:30 மணியளவில் புறப்படும் இந்த விண்ணப்பிக்க வரும் டிச.28-ம் தேதியே கடைசி நாளாகும். இதுகுறித்த மேலும் தகவலுக்கு ‘8943827941’ என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!