News December 17, 2025
தேனியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் சிவஜோதி. இவரது கணவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராகேஷ் என்பவரது குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் சிவஜோதி வீட்டிற்கு சென்ற ராகேஷ் அவரது உறவினர் வெற்றி ஆகியோர் சிவஜோதியிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது (டிச.16) செய்தனர்
Similar News
News January 8, 2026
தேனி: ஓடும் பஸ்ஸில் 19 பவுன் நகை அபேஸ்..

வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவர் சுமிதா. இவா் நேற்று (ஜன.7) தேனியிலிருந்து வீரபாண்டிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளாா். வீரபாண்டியில் பேருந்தில் இருந்து கீழே இறங்கிப் பாா்த்த போது சுமிதாவின் பையில் வைத்திருந்த 19 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 8, 2026
தேனி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணு
News January 8, 2026
தேனி: ஆந்திரா இளைஞரிடம் ரூ.25 லட்சம் மோசடி…

குள்ளபுரத்தை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது நண்பர் ஆந்திராவைச் சார்ந்த சீனு டிப்ளமோ படித்துள்ளார். இவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கிருஷ்ணன், பிச்சைமணி இருவரும் சேர்ந்து ராயப்பன்பட்டியைச் சேர்ந்த மாதவனை, சீனுவிற்கு அறிமுகம் செய்து வைத்தனர். இதையடுத்து சீனுவிடம் மாதவன் வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து மாதவன் மீது ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


