News December 17, 2025

தஞ்சை: கொலைவழக்கில் மேலும் 2 பேர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம், மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டித்ததால் 2019ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய முகமது அலி ஜின்னா மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த அஸ்மத் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Similar News

News December 24, 2025

தஞ்சாவூர்: டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்!

image

பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க ரூ.50,000 கடன் உதவி வழங்குகிறது. மேலும் கடனுக்கான முதல் தவணையைச் செலுத்தத் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகவும். மேலும் அறிய தஞ்சாவூர் மாவட்ட சமுக நல அலுவலரை அணுகலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 24, 2025

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதிகள் (2/2)

image

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் ஃபுட் கேட்டரிங் துறையில் சுயதொழில் தொடங்க விரும்புபவராக இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரரால் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சொந்தமாக நிர்வகிக்கப்பட வேண்டும். உணவுக் கடைகள், கேன்டீன்கள், டிபன் கடைகள் போன்று சிறுதொழிலாக இருக்க வேண்டும். வங்கிகளில் சென்று விண்ணப்பித்த பிறகு, ஆய்வு செய்யப்பட்டு கடன் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News December 24, 2025

தஞ்சை: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!