News December 17, 2025
₹62 லட்சம் கோடி சொத்து… புதிய சாதனை படைத்த மஸ்க்!

எலான் மஸ்க், $684 பில்லியன் (சுமார் ₹62 லட்சம் கோடி) சொத்து மதிப்பை தாண்டி, உலகின் முதல் $600 பில்லியனர் என்ற சாதனையை படைத்துள்ளார். உலகின் பெரும் பணக்காரர்களான ஜெஃப் பெசோஸ், மார்க் சக்கர்பெர்க், ஜென்சன் ஹுவாங்க் ஆகிய 3 பேரின் ஒட்டுமொத்த சொத்தை விட, மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. $800 பில்லியன் மதிப்பில் SpaceX, பங்குச்சந்தையில் வெளியிடப்படும் என்ற தகவலே சொத்து உயர்வுக்கு காரணம்.
Similar News
News December 27, 2025
FLASH: தங்கம் விலை தடாலடியாக மாறியது

தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இன்றுடன் இந்த வார வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1.04 லட்சமாக உள்ளது. இது கடந்த வாரத்தைவிட ₹4,800 அதிகமாகும். கடந்த சனிக்கிழமை 1 சவரன் ₹99,200-க்கு விற்பனையாகி இருந்தது. இதுஒருபுறம் இருக்க, வெள்ளி விலை ஒரே வாரத்தில் கிலோவுக்கு ₹48,000 அதிகரித்து, ₹2.74 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை விலை எப்படி இருக்குமோ?
News December 27, 2025
2025-ல் ஏற்பட்ட கட்டுமான இடிபாடுகள்

பாதுகாப்பு விதிகள், அவசரம் மற்றும் தரமற்ற முறை உள்ளிட்ட பல காரணங்களால் கட்டுமான இடிபாடுகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் பல்வேறு இடங்களில் கட்டுமான இடிபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதில் சில இடிபாடுகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்தாண்டின் கட்டுமான இடிபாடுகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 27, 2025
CM ஸ்டாலினின் சவாலுக்கு பதில் சவால் விடுத்த EPS

<<18676065>>CM ஸ்டாலின்<<>> விடுத்த சவாலுக்கு EPS பதிலளித்துள்ளார். பல ஆண்டுகளாக அவருக்கு, தான் வைத்த ஓபன் சேலஞ்ச் இன்னும் Pending-ல் உள்ளதாக குறிப்பிட்டுள்ள EPS, அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதையே CM ஸ்டாலின் வேலையாக கொண்டுள்ளார் என விமர்சித்துள்ளார். மேலும், நேருக்குநேர் மேடை ஏறி, தனது கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாரா எனவும் சவால் விடுத்துள்ளார்.


