News December 17, 2025

பள்ளியில் மாணவர் மரணம்.. நேரில் விரையும் அமைச்சர்?

image

திருவள்ளூர், கொண்டாபுரம் அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து <<18580609>>மாணவன் <<>>உயிரிழந்தது மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், மாணவனின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து, பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி மற்றும் ₹1 கோடி நிவாரண நிதி கோரி போராட்டம் நடைபெறுகிறது. இதனால், சமாதான பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் அன்பில் நேரில் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News December 26, 2025

வண்ணமயமான மார்கழி கோலங்கள்!

image

பாக்டீரியாவை அழிக்கும் சக்தி சாணத்திற்கு உண்டு என்பதாலேயே, அதை பிள்ளையாராக பிடித்து கோலத்தின் நடுவே வைக்கும் வழக்கத்தை முன்னோர்கள் கடைபிடித்துள்ளனர். அத்துடன் சாணத்தை கரைத்து வீட்டை சுற்றியும் தெளித்துள்ளனர். அந்த வகையில், மார்கழியில் வீட்டுவாசலில் போடக்கூடிய சில வண்ணமயமான கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். தவறாமல் வீட்டுவாசலில் முயற்சிக்கவும்.

News December 26, 2025

பொங்கல் பரிசுத் தொகை.. போட்டு உடைத்தார்

image

பொங்கல் பரிசுத் தொகையால் ஓட்டு மதிப்பு நாளுக்கு நாள் கூடுவதாக சீமான் கூறியுள்ளார். பணம் கொடுத்தால் தான் ஓட்டு போடவே வருவதாகவும், 2021-ல் EPS ₹2,500 கொடுத்தார். தற்போது திமுக அரசு ₹3,000 கொடுக்க உள்ளதாக தெரிகிறது என சஸ்பென்ஸை போட்டு உடைத்துள்ளார். பொங்கல் பரிசு அறிவிப்புக்காக தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், சீமானின் இந்த பேச்சு குறித்து உங்க கருத்து என்ன?

News December 26, 2025

தீவிரவாதிகளுக்கு மரண வாழ்த்து கூறிய டிரம்ப்!

image

நைஜீரியாவில் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என <<18175977>>டிரம்ப்<<>> எச்சரித்திருந்தார். இந்நிலையில், வடக்கு நைஜீரியாவில் உள்ள ISIS தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் நாளில், அப்பாவி கிறிஸ்தவர்களை கொன்ற ISIS-க்கு பாடம் புகட்டியதாக கூறிய அவர், செத்து மடிந்த தீவிரவாதிகளுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!