News December 17, 2025
நீலகிரி: பைக், கார் பெயர் மாற்ற – இத பண்ணுங்க!

நீலகிரி மக்களே, நீங்க செகண்ட்ஸ் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. இங்கு <
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!
Similar News
News January 15, 2026
உதகை அருகே விபத்து

உதகையிலிருந்து மைசூர் நோக்கி நேற்ற பிக்கப் வேன் ஒன்று கல்லட்டி மலைப்பாதையில் விபத்தில் சிக்கியது. வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், ஓட்டுநர் சாலையோர தடுப்பு சுவரில் மோதி வாகனத்தை நிறுத்தினார். இவ்விபத்தில் ஓட்டுநர் குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 15, 2026
உதகையில் அதிரடி காட்டிய அதிகாரிகள்

உதகை படகு இல்லம் பகுதியில் சுற்றுலா பேருந்தில் தண்ணீா் பாட்டில்கள் எடுத்து வரப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு நகராட்சி ஊழியா்கள் சோதனை செய்த போது, மகாராஷ்டிரா மாநிலத்தை சோ்ந்த சுற்றுலா பேருந்தில் 400-க்கும் மேற்பட்ட அரை லிட்டா் தண்ணீா் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதை பறிமுதல் செய்ததுடன், ரூ.45,000 அபராதம் விதித்தனா்.
News January 15, 2026
உதகை தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு பொங்கல் விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் யுவராஜ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


