News December 17, 2025
சிவகங்கை: ஒரே நாளில் 3 பேர் மீது குண்டாஸ்!

கிழவனுார் பகுதியை சேர்ந்த சற்குனம் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். கொலையில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த அரிராஜ், மாதவன் ஆகிய இருவரை காளையார்கோவில் போலீஸார் கைது செய்தனர். மேலும் வைரம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி கடந்த மாதம் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் வேண்டுகோள் அடிப்படையில் மூவரையும் குண்டர் தடுப்பு காவலில் அடைக்க கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.
Similar News
News December 22, 2025
சிவகங்கை: அரசு பேருந்து மோதி ஒருவர் பலி

அறந்தாங்கியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(70). இவர் வஞ்சினிபட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் அறந்தாங்கிக்குச் சென்று கொண்டிருந்தார். சில்லாம்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனம் மீது மதுரையிலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
News December 22, 2025
சிவகங்கை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) என்ற எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். அனைவருக்கும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News December 22, 2025
சிவகங்கை: 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

சிவகங்கை மாவட்டம், மேல நெட்டூர் கிராமத்தில் வசிக்கும் சுந்தர பாண்டியன் மனைவி பிரியதர்ஷினி வயது 25 அவர்களுக்கு பிரசவ வலி காரணமாக இளையான்குடி ஆம்புலன்சுக்கு அழைப்பு வழங்கப்பட்டது. மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அழகான பெண் குழந்தை 108 ஆம்புலன்ஸில் பிறந்தது. பின்பு தாயும் சேயும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


