News December 17, 2025
தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹12,400-க்கும், சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹99,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News December 31, 2025
சாதுக்கள் எதிர்ப்பால் ரத்தான சன்னி லியோன் நிகழ்ச்சி!

சாதுக்களின் கடும் எதிர்ப்பால் மதுராவில் மதுபான விடுதி ஒன்றில் நடைபெற இருந்த நடிகை சன்னி லியோனின் புத்தாண்டு நிகழ்ச்சி ரத்தானது. கிருஷ்ணன் லீலைகள் நிகழ்த்திய இப்புனித நகரத்தில், சன்னி லியோனை அழைத்து ஆபாசம் பரப்புகிறார்கள். அவர்களை இந்த ஜென்ம பூமியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என கலெக்டரிடம் சாதுக்கள் மனு அளித்திருந்தனர். அதனையடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
விண்ணில் நெருப்பு பந்துகள்! எப்போது பார்க்கலாம்?

2026 தொடக்கத்திலேயே இயற்கை ஓர் அழகான வானியல் விருந்தை அளிக்கவுள்ளது! அதுதான் ‘குவாட்ரான்டிட்’ எரிகல் மழை. ஜன.3 இரவு மற்றும் 4-ம் தேதி அதிகாலை இந்த நிகழ்வு உச்சத்தை எட்டும். 6 மணி நேரம் மட்டுமே நீடிக்கும் எரிகல் மழையின் போது, சுமார் 120 எரிகற்கள் வரை வானை கிழித்து செல்லும். மொட்டை மாடியில், வடக்கு திசையில் வெறும் கண்களாலேயே இதை பார்க்கலாம். பிரகாசமான இந்த நெருப்பு பந்துகளை பார்க்க மிஸ் பண்ணாதீங்க!
News December 31, 2025
சொல்லாம போயிட்டீயே அப்பா… கதறும் புகழ்

தன்னுடைய தந்தை உயிரிழந்த செய்தியை பிரபல நகைச்சுவை நடிகர் விஜய் டிவி புகழ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அப்பா என்கிட்ட சொல்லாம எங்கேயும் போக மாட்டீயே.. தெய்வமே இப்படி சொல்லாம போயிட்டீயே என தனது மன ஆற்றாமையை கொட்டியுள்ளார். KPY, CWC உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான புகழ், தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தந்தையை இழந்த புகழுக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


