News December 17, 2025
தஞ்சை: ஒரே நாளில் 3 வீடுகளில் திருட்டு!

கபிஸ்தலம் பட்டவர்த்தியில் வெங்கடேசன், மணிகண்டன், சைபுனிஷா ஆகியோரின் வீடுகளில் கதவை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. வெங்கடேசன் வீட்டில் 2 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி திருடு போனது. அதே போல் மணிகண்டன் வீட்டில் 3.5 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கமும், சைபுனிஷா வீட்டில் ரூ. 40 ஆயிரம் ரொக்கம், வெள்ளிக் கொலுசுகளும் திருடு போயுள்ளன. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 21, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 20, 2025
தஞ்சை : 8th போதும்.. அரசு வேலை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
தஞ்சை: சுற்றுலா வந்த சொகுசு பேருந்து விபத்து

வல்லம் அருகே இன்று காலை கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு 50க்கும் மேற்பட்ட சுற்றுலாபயணிகளுடன் வந்த சொகுசு பேருந்து, ஜல்லி ஏற்றிக்கொண்டு சென்ற லாரியின் பின் பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


