News December 17, 2025
விழுப்புரம்: புதுச்சேரி மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது

விழுப்புரம் மேற்கு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜிஆர்பி தெருவில் புதுச்சேரி மாநில மதுபாட்டில் விற்பனை செய்த ஆனந்தன் என்பவரை போலீசார் நேற்று (டிச.16) கைது செய்தனர். அவரிடம் இருந்து 90மில்லி அளவு கொண்ட 100 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News January 14, 2026
விழுப்புரம்: 12th PASS – ரூ.45,000 சம்பளத்துடன் வேலை!

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12-ம் வகுப்பும் மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29.<
News January 14, 2026
விழுப்புரத்தில் வடமாநிலத்தவர் அதிரடி கைது!

விழுப்புரம் புறவழிச்சாலை சந்திப்பு அருகே, காவல் ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார், நேற்று சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த ஹலீம் உல்லா என்பவர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், 60 கிராம் கஞ்சா மற்றும் 1152 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
News January 14, 2026
விழுப்புரம்: மருமகன் கண்முன்னே மாமனார் பலி!

விழுப்புரம்: முட்ராம்பட்டைச் சேர்ந்தவர் விவசாயி ராஜாராம். இவரது மருமகன் குணசேகரனுடன் நேற்று புதுச்சேரிக்கு பைக்கில் சென்றார். பின்னர் மீண்டும் விழுப்புரத்தை நோக்கி திரும்பியபோது, கெங்கராம்பாளையம் அருகே கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராஜாராம் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், குணசேகரன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


