News December 17, 2025
தங்கம் விலை மளமளவென மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $6.20 உயர்ந்து, $4,312.09-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்து வரும் நிலையில், நேற்று (டிச.16) சவரன் ₹98,800-க்கு விற்பனையானது.
Similar News
News February 5, 2026
புத்தர் பொன்மொழிகள்!

*பிறர் செயல்களில் குறைகளை மட்டுமே காணாதீர்கள். மற்றவர்களின் குறைகளை மட்டுமே கண்டுபிடிப்பவன், தனக்குத் தானே குழி பறித்துக்கொள்கிறான் *கூர்மையான கத்தியை போன்றது நாக்கு. ரத்தம் வர வைக்காமலேயே ஒருவனைக் கொன்றுவிடும் வல்லமை அதற்கு உண்டு *உங்கள் மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் நீங்களே காரணம் *ஆயிரம் வெற்று வார்த்தைகளைவிட மேன்மையானது, அமைதியைக் கொடுக்கும் ஒரே ஒரு வார்த்தை
News February 5, 2026
மலேசியா செல்லும் PM மோடி

2 நாள் அரசுமுறைப் பயணமாக பிப்.7-ல் PM மோடி மலேசியா செல்கிறார். இதில் அந்நாட்டு PM அன்வர் இப்ராஹிமை சந்தித்து பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் & வர்த்தகம் குறித்து ஆலோசிக்கிறார். பயணத்தின் ஒரு பகுதியாக 10-வது இந்தியா, மலேசியா CEO-க்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மலேசியாவில் வாழும் இந்திய சமூகத்தினர், வணிகப் பிரதிநிதிகளுடன் PM மோடி உரையாடுகிறார்.
News February 5, 2026
தர்ணாவில் ஈடுபடுவேன்: ராஜமெளலி

தான் இயக்கும் ‘வாரணாசி’, 3 மணிநேரம் ஓடக்கூடிய ஒரே பாகமாக மட்டுமே வெளியாகும் என ராஜமெளலி தெரிவித்துள்ளார். படம் வெளியாவதற்குள் இந்தியாவில் போதிய IMAX திரைகள் வந்துவிடுமா என்ற கேள்விக்கு, நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட இடத்தின் முன்பு தர்ணா செய்வது வழக்கம். அதன்படி இந்தியாவில் நிறைய IMAX திரைகள் உருவாக்க சொல்லி US-ல் உள்ள IMAX அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபடுவேன் என்றார்.


