News December 17, 2025
திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் வரும் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் செல்லாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
துவாக்குடியில் 216 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

துவாக்குடி பூசாரி தெரு மளிகை கடையில் போலீசார் நடத்திய சோதனையில் கடை உரிமையாளர் ஜெகதீஸ்வரனிடம் இருந்து 7.8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையெடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், வயலூர் அம்மையப்பன் நகரை சேர்ந்த ஜமால் முகமது என்பவரின் வீட்டில், நடத்திய சோதனையில் 208.5 கிலோ குட்காபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
News March 4, 2026
இந்தியில் எழுதப்பட்ட பெயர் பலகை அகற்றம்

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் இந்தியில் எழுதப்பட்ட பெயர் பலகைகளை ரயில்வே நிர்வாகத்தினர் அகற்றி வருகின்றனர். ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள சமூக ஆர்வலர்களும் திமுக, அதிமுக, நாம் தமிழர் என பல்வேறு அரசியல் கட்சியினரும் ஒருமித்த குரல் எழுப்பினர். அதனைத் தொட்டர்ந்து ரயில்வே துறை நிர்வாகம் சார்பில் பெயர் பலகையை அகற்றினர்.
News March 4, 2026
திருச்சி: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக Payment Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். அவ்வாறு வரலைவில்லை என்றால் கவலை வேண்டாம். HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். பணம் வருவதற்கு 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். SHARE பண்ணுங்க!


