News December 17, 2025
ஏழைகளின் வாழ்வாதாரத்தை அழிக்க மோடி திட்டம்: ராகுல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றத்துக்கு ராகுல் காந்தி தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வந்த மோடி, இப்போது முழுவதுமாக அகற்றிவிட்டார் என அவர் சாடியுள்ளார். ஏற்கெனவே இளைஞர்களின் வேலைவாய்ப்பை அழித்த மோடி, அடுத்ததாக ஏழை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க இலக்கு வைத்துள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
கருவறை வாயிலில் இருப்பவர்கள் யார் தெரியுமா?

கோயில் கருவறைக்கு வெளியே இருபுறமும் துவாரபாலகர்கள் இருப்பார்கள். ஆகம விதிப்படி, மூலஸ்தானத்தின் வாயில் காப்பவர்கள் இவர்கள். பக்தர்கள் முதலில் துவாரபாலகர்களை நமஸ்கரித்து பின்னர், தெய்வத்தை தரிசிக்க வேண்டும் என்பது ஆலய தரிசன விதி. விஷ்ணு ஆலயங்களில் ஜயனும், விஜயனும், சிவாலயங்களில் சண்டனும், பிரசண்டனும் துவாரபாலகர்களாக உள்ளனர். அம்மன் கோயிலில் துவாரபாலகிகளாக ஹரபத்ரா, சுபத்ரா உள்ளனர்.
News December 23, 2025
ஜெயிலர் 2 படத்தில் கேமியோ சற்று அதிகம்: சிவராஜ்குமார்

‘ஜெயிலர் 2’ படத்தில் தான் நடிப்பதை சிவராஜ்குமார் உறுதி செய்துள்ளார். ஒரு நாள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டதாகவும், ஜனவரிக்குள் தனது பகுதி முடிவடையும் என்றும் அப்டேட் கொடுத்துள்ளார். முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் உருவாகி வருவதாகவும், இதில் தனது ரோலின் நீளம் சற்று அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டிஸ்யூ சம்பவக்காரனாக சிவராஜ்குமாரை பார்க்க ரெடியா?
News December 23, 2025
தங்கம் விலை மளமளவென மாறியது

ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலையில் இன்று மிகப்பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், சர்வதேச சந்தையில் இன்று (டிச.23) 1 அவுன்ஸ்(28g) தங்கம் விலை $127.48 அதிகரித்து $4,467.79 ஆக உள்ளது. வெள்ளியும் 1 அவுன்ஸ்-க்கு $1.97 உயர்ந்து $69.11-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை (தற்போது ₹₹1,00,560) இன்று கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.


