News December 17, 2025

பிரித்வி ஷாவின் சோகத்தை மறக்க வைத்த டெல்லி அணி

image

IPL மினி ஏலத்தின் முதல் செட்டில் பிரித்வி ஷாவை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த பிரித்வி ஷா, இதயம் உடைந்த ஸ்மைலியுடன் ’IT’S OK’ என இன்ஸ்டாவில் விரக்தியுடன் பதிவிட்டிருந்தார். ஆனால் அடுத்த ரவுண்டில் பிரித்வி ஷாவை டெல்லி அணி அடிப்படை விலையான ₹75 லட்சத்துக்கு வாங்கியது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் பழைய பதிவை நீக்கிவிட்டு, BACK TO MY FAMILY என போஸ்ட் செய்துள்ளார்.

Similar News

News December 28, 2025

BREAKING: அதிகாலையில் தமிழக மீனவர்கள் அதிரடி கைது

image

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 3 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது படகு, மீன்கள், வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த வாரம் இலங்கை சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அதிபருடன் இந்திய மீனவர்கள் பிரச்னை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. ஆனாலும், கூட கைது நடவடிக்கை தொடர்வது மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News December 28, 2025

Sports 360°: செஸ்ஸில் இந்திய வீரர்கள் சறுக்கல்

image

*SA டி20-ல், பிரிடோரியா கேபிடல்ஸை 22 ரன்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது *நியூசிலாந்து ODI தொடருக்கான இந்திய அணி, ஜன.3-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு *உலக ரேபிட் செஸ் தொடரில் குகேஷ், பிரக்ஞானந்தா பின்னடைவை சந்தித்துள்ளனர் *மகளிருக்கான ஹாக்கி லீக் தொடர் ராஞ்சியில் இன்று தொடக்கம் *ILT20, முதலாவது குவாலிஃபையர்ஸில் Desert Viper-ஐ எதிர்கொள்கிறது MI Emirates

News December 28, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹5,600 உயர்ந்தது

image

ஆண்டின் இறுதியில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதன்படி டிச.20 முதல் டிச.27 வரையிலான வாரத்தில் மட்டும் சவரனுக்கு ₹5,600 அதிகரித்து, ₹1,04,800 என்ற வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வரும் நாள்களிலும் இந்திய சந்தையில் தங்கம் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் கணித்துள்ளனர்.

error: Content is protected !!