News December 17, 2025
தருமபுரி காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு நேர ரோந்து விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தருமபுரி, அதியமான் கோட்டை, தொப்பூர், மதிகோன்பாளையம், கிருஷ்ணாபுரம், அரூர், கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, ஏ பள்ளப்பட்டி போன்ற பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.17) காலை வரை ரோந்து மேற்கொள்ளும் காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது. மேலும், உதவி தேவைப்படும் சூழலில் இவர்களை அணுகலாம்!
Similar News
News December 30, 2025
தருமபுரியில் விலை உயர்வு!

தருமபுரி உழவர்சந்தைக்கு கடந்த சில வாரங்களாக முருங்கைக்காய் வரத்து குறைந்ததால் அதன் விலை அதிகரித்தது. பின்னர் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. இந்த நிலையில் சந்தைக்கு வரத்து மீண்டும் குறைந்ததால் நேற்று முருங்கைக்காய் விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரித்தது. தருமபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. தனியாக ஒரு முருங்கைக்காய் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
News December 30, 2025
தருமபுரி குறிஞ்சி கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு ஆலோசனை!

தருமபுரி ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் இன்று(டிச.29) மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் P.K.கைலாஷ் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் துறை அலுவலர்கள் பங்கு பெற்றனர். பின், உணவு தரத்தை மேம்படுத்த கலந்துரையாடினர்.