News April 29, 2024

 வந்தவாசி: லட்சுமி நரசிம்மர் மகா தேரோட்டம் 

image

வந்தவாசி அடுத்த ஆவணியாபரம் கிராமத்தில் சிம்ம மலை மீது அமர்ந்திருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலய சித்திரை மாத பிரம்மோற்சவ விழா  தேரோட்டம் இன்று நடைபெற்றது. சேத்துப்பட்டு அவனியாபுரம், கொழப்பலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சிம்ம மலையை சுற்றி வந்தனர்.   

Similar News

News February 2, 2026

கிரிவலம் முடிந்து தூய்மை பணிகள் தீவிரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

திருவண்ணாமலையில் தை மாத பௌர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து, கிரிவலப் பாதைகளில் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று (பிப்.02) ஆட்சியர் க.தர்ப்பகராஜ் கிரிவலப் பாதைகளை நேரில் பார்வையிட்டு, துப்புரவு பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

News February 2, 2026

ஆரணி: 10.5% இட ஒதுக்கீடு கேட்டு தற்கொலை!

image

தி.,மலை மாவட்டம் ஆரணி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் பட்டதாரி வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி கைப்பட கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 2, 2026

தி.மலை: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

தி.மலை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே <<>>கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!