News December 17, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கை பேணும் பொருட்டு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவசர நிலை அல்லது சந்தேக நிகழ்வுகள் குறித்து உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள 100-ஐ டயல் செய்யலாம்!
Similar News
News December 28, 2025
கிருஷ்ணகிரி உழவர் சந்தை விலை நிலவரம்

கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் இன்றைய (டிச.27) காய்கறிகள் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி: ரூ.46-50, உருளை: ரூ.28, பெரிய வெங்காயம்: ரூ.35, மிளகாய்: ரூ.45, கத்திரி: ரூ.20, வெண்டைக்காய்: ரூ.36, பீர்க்கங்காய்: ரூ.30, சுரைக்காய்: ரூ.20, புடலங்காய்: ரூ.30, பாகற்காய்: ரூ.30, தேங்காய்: ரூ.60, கேரட்: ரூ.70, பீன்ஸ்: ரூ.50 என விற்பனை செய்யப்படுகின்றன.
News December 28, 2025
ஓசூரில் வாலிபருக்கு நேர்ந்த சோகம்!

ஓசூரில் சிப்காட் அருகே வாட மாநில இளைஞர் ஒருவர் பேகே பள்ளியில் இயங்கி வரும் தனியார் கம்பெனி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (டிச.27) இரவு 9 மணியளவில் நண்பர்களுடன் குளிர் காய்வதற்காக நெருப்பை மூட்டியுள்ளார். அப்போது தீ இளைஞரின் சட்டையில் பற்றி எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த நண்பர்கள் தீயை அணைக்க முயன்றதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். தற்போது வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
News December 28, 2025
கிருஷ்ணகிரி: மனைவி மீதான சந்தேகத்தில் கணவன் விபரீத செயல்!

ஊத்தங்கரை அருகே, தனது மனைவிக்கு பிரபு என்பவருடன் தொடர்பு இருப்பதாக சிவகுமார் (39) சந்தேகித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கடந்த 21-ஆம் தேதி பிரபுவின் வீட்டிற்குச் சென்ற சிவகுமார், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்திற்குத் தீ வைத்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரைக் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


